TRAIN THE TRAINER (TAMIL) பயிற்சியாளர் பயிற்சி பட்டறை

GOOGLE-1

Thursday, April 11, 2019

Five key questions for assessing your consultants:- உங்கள் ஆலோசகர்களை மதிப்பிடுவதற்கான ஐந்து முக்கிய கேள்விகள்:-

Five key questions for assessing your consultants:- உங்கள் ஆலோசகர்களை மதிப்பிடுவதற்கான ஐந்து முக்கிய கேள்விகள்:-

Managers are bombarded with advice about how to be more effective, from how to make best use of their time to how to finesse a budget, mentor their staff and handle office politics. But one important area that doesn’t receive much attention is how managers can get the most out of their consultants.

மேலாளர்கள் எப்படி தங்கள் நேரத்தை சிறந்த முறையில் பயன்படுத்துவது?, எப்படி ஒரு பட்ஜெட், அறிவுரைகளை தங்கள் ஊழியர்கள் மற்றும் அலுவலக அரசியலை கையாள்வது என்பதில் இருந்து எவ்வாறு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்ற ஆலோசனையுடன் அணுகுகிறார்கள். ஆனால் சிறப்பு கவனம் செலுத்தாத ஒரு முக்கிய பகுதி மேலாளர்கள், தங்கள் ஆலோசகர்களில் பெரும்பாலானவற்றை எவ்வாறு பெற முடியும் என்பதுதான் சவாலான பணியாக இருக்கும்.

Organizations have developed a variety of systems and processes to help manage consultants, but many involve elaborate and time-consuming surveys. As a corporate manager, I worked with a variety of consultants over the years and realized there were only five questions I needed to ask them:

நீங்கள் ஒரு நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக இருக்கிறீர்கள், உங்களது பிரிவிற்கான உற்பத்தியை அதிகரிக்கவோ அல்லது திட்டப்பணியை சிறந்தமுறையில் செய்வதற்கு தேவையான வழிவகைகளை மேற்கொள்ளுவதற்கு நீங்கள் ஒரு ஆலோசகரை நியமனம் செய்யும்போது முக்கியமாக கவனிக்கவேண்டிய 5 ஐந்து விவரங்கள் உள்ளது.

1. How have you helped me achieve my business objectives?
1.எனது வணிக நோக்கங்களை அடைவதற்கு நீங்கள் எவ்வாறு எங்களுக்கு உதவியுள்ளீர்கள்?

This question elevates the discussion from whether the specific service or product provided was well-executed or high quality to whether it supported your desired business result: Did we earn market share? Did we increase revenue? Did we receive government approval for a new project or product? A good report or marketing campaign isn’t useful if it doesn’t contribute to an end result.

2. How have you helped me manage my budget?
2. எனது பட்ஜெட்டை நிர்வகிப்பதற்கு நீங்கள் எவ்வாறு உதவியுள்ளீர்கள்?

This gets to the heart of one of the most important issues in the client-consultant relationship: value. Your consultant might bill X for something, but you might value it at half of that. Conversely, the consultant might bill at Y but create significantly more value for your company. You want consultants to think about how they provided the most value to you. Did they provide the service or product in the most cost-effective way? Did they provide exactly what you needed to meet your objective and only what you needed, or did they provide unnecessary extras that can be eliminated in future?

3. What did you teach me to help me do my job better?
3. என் வேலையை சிறப்பாக செய்வதற்கு, ஆலோசகரான தங்களிடம் நான் கற்றுக்கொள்ளவேண்டிய பயிற்சிகள் எவை? 

This ensures your consultant is focused not only on completing the immediate assignment but is also thinking about your long-term interests and creating lasting value for you. No organization should rent a consultant’s expertise or skills without getting some lasting benefit beyond the assignment, whether it’s in-depth knowledge about how a system works, best practices, a valuable new process, or a new relationship with a key stakeholder.

4. What did you learn from me so you can serve me better in the future?
4. எங்களது நிறுவனத்தின் தற்போதைய செயல்பாடுக்களை பற்றி நீங்கள் என்ன தெரிந்துகொண்டீர்கள்? இனிவரும் காலங்களில் எங்களது நிறுவனம் மேலும் சிறப்பாக செயலாற்ற, எங்களுக்கு நீங்கள் கூறும் ஆலோசனைகள் என்ன? அதற்கான நடவடிக்கைகள் பற்றிய விவரங்களைக் கூறுங்கள்?

Learning is a two-way street, and good consultants will demonstrate that they are continually learning about your business, your issues, your team, your management style, your culture, your strategy. The more your consultants learn about your company, the better the advice they will be able to offer, and the more cost-effective it will be.

5. What can we do to improve how we work together?
5. தங்களின் ஆலோசனை நடவடிக்கைகளுக்கு ஏற்ப, நிறுவனத்தின் நாங்கள் எப்படி உங்களோடு ஒன்றாக இணைந்து வேலை செய்து இலக்கினை அடைவது?

You and your consultant share a responsibility to continually assess the relationship and make adjustments to improve it. Suggestions can include having clearer objectives for meetings; involving the consultant earlier on; having the company and/or the consultant follow up in an e-mail after assigning or being assigned work; or providing reports to your company in shorter formats.

If your consultants are working with you on a short-term assignment, you can ask these questions halfway through and again at the end. If it is a longer-term arrangement (such as a retainer or an informal multyear relationship), asking these questions on a quarterly basis works well. Ask your consultants to answer the questions in writing one week before you meet with them for the review. Their answers to all five questions should fit on one page.

Posing these questions on a regular basis and engaging in an open discussion about the answers will lead to a better relationship with your consultant, better consultant performance, and greater value for you as a manager.

இதுபோன்ற மேலும் பல கேள்விகளை கேட்டு அதற்கான, பதில்களைப் பற்றிய வெளிப்படையான கலந்துரையாடலில் ஈடுபடுவதன் மூலம் உங்கள் ஆலோசகரின் சிறந்த செயல்திறன் மதிப்பிடப்படுவதோடு  மேலும் ஒரு மேலாளராக நீங்கள், அதிக மதிப்புடன் உங்களது ஆலோசகரோடு சிறந்த உறவை ஏற்படுத்துக்கொள்ள ஒரு வாய்ப்பாகவும் அமையும். 

The present economy has served as a reminder that there are no guarantees in business. Many companies are finding themselves struggling to stay afloat, and many are sinking. In better economic days, a company could survive with a moderate profit margin achieved through dedicated attention to its bottom line. Focusing on values increases performance levels, improves service, reduces employee variability, and supports sustainability.

Call or E_mail me for a consultation:- We offer a range of services, including group learning events, individual consultations, and practice improvement initiatives.

உங்களுக்கு தேவையான ஆலோசனைக்காக என்னை அழைக்கவும்: - அல்லது உங்கள் நிறுவனத்தின் இலாபத்தை அதிகரிக்கும் வகையில் உங்களது ஊழியர்களின் திறன் மேம்பாட்டு பயிற்சி பெறவும், ஊழியர் அல்லது ஊழியர் குழுவின் கற்றல் நிகழ்வுகள், அல்லது உங்களின் தனிப்பட்ட ஆலோசனை மற்றும் நடைமுறை முன்னேற்ற முயற்சிகளை உள்ளடக்கிய பல்வேறு சேவைகளை பெற என்னை அழையுங்கள் அல்லது எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். 


Call or write to find out how we can work together to achieve your business and career goals.
உங்கள் வணிக மற்றும் தொழில் இலக்குகளை எளிமையாக அடைவதற்கு நாம் எவ்வாறு ஒன்றாக இணைந்து செயல்படலாம் என்பதை அறிய,  ஆலோசகரான என்னை அழையுங்கள் அல்லது எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.


Thanks & Regards,
N.Arthi Krishnan, President and Co-Founder.
In India +91-9717236514, 9871386379. Singapore +65-83176152 
IUBA-INDIA (India & Asia Pacific) 
Project Logistics:Moving the Big,Wide and Heavy.
E_mail:- info@iuba-india.com
@ Business / Projects -Planing Solutions.
@ Systems & Engineering Solutions.
@ Recruitment & Training Solutions.
@ Safety & Quality Management Solutions.
@ Promoters / Service Providers Solutions.
IUBA-INDIA.(www.iuba-india.com)


ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400 ரூபாய் உங்கள் சொந்த செலவுக்காக வரவு வைக்கப்படும். ஆனால்...

*பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-16*

*(ஒள) பணத்தின், நேரத்தின், ஆற்றலின் மதிப்பை தெரிந்துகொள்ளும் பயிற்சி விளையாட்டு-1* 

ஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது.

பரிசு என்னவென்றால் -

ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400 ரூபாய் உங்கள் சொந்த செலவுக்காக வரவு வைக்கப்படும். ஆனால் இந்தப் பரிசுக்கு சில கண்டிஷன்கள் உண்டு.
அவை -
1) அந்த நாளில் நீங்கள் செலவு செய்யாத பணம் உங்கள் கணக்கிலிருந்து எடுக்கப்பட்டுவிடும்.
2) உங்கள் பணத்தை நீங்கள் வேறு அக்கவுண்டிற்கு மாற்ற முடியாது.
3) அதை செலவு செய்ய மட்டுமே உங்களுக்கு உரிமை உண்டு
4) ஒவ்வொரு நாளும் விடியும்போது உங்கள் வங்கிக் கணக்கில் அந்த நாளின் செலவிற்காக 86400 ரூபாய் வரவு வைக்கப்படும்
5) எப்போது வேண்டுமானாலும் வங்கி இந்த ஆட்டத்தை முன்னறிவிப்பு இல்லாமல் நிறுத்திக்கொள்ளலாம்.
6) வங்கி - "முடிந்தது கணக்கு" என்று சொன்னால் அவ்வளவுதான். வங்கிக் கணக்கு மூடப்படும், மேற்கொண்டு வரவு வைக்கப்படமாட்டாது.

இப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்?

உங்களுக்கு பிடித்த எல்லாம் வாங்குவீர்கள் இல்லையா?

உங்களுக்கு மட்டுமல்லாமல் உங்கள் மனதுக்கு பிடித்தவர்களுக்கும் 

வாங்கித்தருவீர்கள் இல்லையா? உங்களுக்கு முன்பின் அறிமுகம்

இல்லாதவர்களுக்காகவும் செலவு செய்வீர்கள். ஏனென்றால்
அவ்வளவு பணத்தையும் உங்களுக்காக மட்டுமே செலவு செய்வது சாத்தியமில்லை என்பதால் - அப்படித்தானே? முடிந்தவரை ஒவ்வொரு ரூபாயையும் எப்படியாவது செலவு செய்து உபயோகிப்பீர்கள்தானே?

உண்மையில் இது ஆட்டமில்லை 

- நிதர்சனமான உண்மை

ஆம்

நம் ஒவ்வொருவருக்கும் இப்படியான ஒரு வங்கிக் கணக்கு இருக்கிறது. நாம் தான் அதை கவனிக்கவில்லை. அந்த ஆச்சரிய வங்கிக்கணக்கின் பெயர் - காலம். 

ஒவ்வொரு நாள் காலையும் நாம் எழுந்திருக்கும் போது வாழ்க்கையின் அதியுன்னத பரிசாக 86400 வினாடிகள்(நேரம்) நமக்கு வழங்கப்படுகிறது.

இரவு தூங்கப் போகும் போது நாம் மிச்சம் வைக்கும் நேரம் நமக்காக சேமித்து வைக்கப் படுவதில்லை. 

அன்றைய பொழுது நாம் வாழாத வினாடிகள் தொலைந்தது தொலைந்தது தான். 

நேற்றைய பொழுது போனது போனது தான். 

ஒவ்வொரு நாள் காலையிலும் புத்தம் புதிதாக நம் கணக்கில் 86400நொடிகள் காலம் நமக்காக நேரத்தை வாரிவழங்குகிறது. 

எச்சரிக்கையே இல்லாமல் எப்போது வேண்டுமானாலும் வங்கி உங்கள் கணக்கை முடக்க முடியும்.

அப்படியிருக்கும் பட்சத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்? உண்மையில் 86400வினாடிகள் என்பது அதற்கு சமமான அல்லது அதற்கும் மேலான பணத்தை விடவும் மதிப்பு வாய்ந்தது அல்லவா? 

இதை ஞாபகம் வைத்துக்கொண்டால் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் நாம் கொண்டாடிக் கழிக்க மாட்டோமா?

காலம் நாம் நினைப்பதை விட வேகமாக ஓடிவிடும். எனவே உங்களின் , உங்களுக்கே உரித்தான நேரத்தை பொன் போல பாதுகாத்து, அவற்றை சிறப்பாக உபயோகித்து. ....சந்தோஷமாக இருங்கள்...  சுற்றியுள்ளவர்களை ஆழமாக நேசியுங்கள் - வாழ்க்கையைக் கொண்டாடுங்கள்...... 

என்ன சுட்டீஸ்.... நேரத்தின் மதிப்பு, பணத்தின் மதிப்பைவிட உயர்ந்தது என்பதை தெரிந்துகொண்டீர்களா?

வாருங்கள் நமது நாளை மறுநாள் விளையாடவிருக்கும் பயிற்சி விளையாட்டில் சிந்திப்போம்.

நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி. புது தில்லியிலிருந்து.

முன்னோட்டம்:-
அடுத்ததாக  நாம் விளையாடவிருக்கும் பயிற்சி விளையாட்டு:-
*பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-17*

*(ஒள) பணத்தின், நேரத்தின், ஆற்றலின் மதிப்பை தெரிந்துகொள்ளும் பயிற்சி விளையாட்டு-3*

Tuesday, April 2, 2019

...ஆகவே, கட்டளைக்கு அடிபணியாத ஒருவரிடமிருந்து வேலை வாங்குவது எப்படி?...

TRAIN THE TRINER-4
...ஆகவே, கட்டளைக்கு அடிபணியாத ஒருவரிடமிருந்து வேலை வாங்குவது எப்படி?...
நிறுவனர்:- நீங்க எந்த வேலைக்காக விண்ணப்பம் செய்த்திருக்கிறீர்கள் என்று உங்களுக்கு தெரியுமா? 

விண்ணப்பதாரர்:- "தெரியும்... அலுவலக மேலாளர் பதவிக்கு விண்ணப்பித்து, தற்போது அதற்கான நேர்காணல் தேர்விற்கு வந்திருக்கிறேன்" ...

நிறுவனர்:- உங்களது தலைமையின் கீழ் உள்ள ஒருவர், நீங்கள் கூறும் எந்த வேலையும் செய்யமாட்டேன்,  என்று 'அடம்' பிடிக்கிறார் என்றால், நீங்கள் என்ன செய்வீர்கள்? 

விண்ணப்பதாரர்:- அவரை நேரில் அழைத்து, அதற்கான காரணத்தை தெரிந்துகொண்டு, அதை நிவர்த்திசெய்து, அவரை சிறப்பாக செயல்படுமாறு வழிநடத்துவேன். 

நிறுவனர்:- அதன்பிறகும் அவர் உங்களது பேச்சை கேட்கவில்லை என்றால், என்ன செய்வீர்கள்?


விண்ணப்பதாரர்:- அவரை கண்டித்து வேலையை செய்ய நிர்பந்திப்பேன்.


நிறுவனர்:- அதன்பிறகும், அவர் உங்களது கட்டளையை மதிக்கவில்லை என்றால் என்ன செய்வீர்கள்?


விண்ணப்பதாரர்:- எனது கட்டளையை மதிக்காத அவரை வேலையிலிருந்து நீக்குவதற்காக உங்களிடம் முறையிடுவேன்...

நிறுவனர்:- என்னிடம் முறையிடுவதற்கு உங்களை நான் எதற்க்காக மேலாளராக தேர்வுசெய்யவேண்டும் ... ஆகவே நீங்கள் வேறு வேலைக்கு முயற்சிசெய்யுங்கள்... நீங்கள் போகலாம்....
xxxxxxxxxxxxxx-------xxxxxxxxxxxxxxxxxx-----xxxxxxxxxxxxxxxxx

ஆகவே அதிகாரியின் கட்டளைக்கு அடிபணியாத ஒருவரிடமிருந்து வேலை வாங்குவது எப்படி?... என்று தெரிந்துகொள்ளவேண்டுமா?

நீங்கள் ஒரு சிறந்த நிர்வாக அதிகாரி என்றால் முதலில் ஒன்றை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். உங்களது கட்டளைக்கு அடிபணிந்து உங்களுடன் பணியாற்றும் உங்களது குழுவிலிருப்பவர்கள் அனைவரும்  உங்களோடு சேர்ந்த ஒரு அங்கத்தினர் என்பதை நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும். 

அப்படி உங்களது குழுவின் அங்கத்தினராக இருக்கும் எவரையும், உங்களது ஆணையை மதிக்கவில்லை என்று வேலையிலிருந்து நீக்கவேண்டும் என்றால், அது உங்களுக்குத்தான் பெரிய இழப்பு. ஆகவே, முதலில் நீங்கள்தான் அந்த நிறுவனத்தைவிட்டு வெளியேற்றப்படவேண்டியவர்,  காரணம் நீங்கள் நிர்வாக அதிகாரியாக இருக்கத் தகுதியற்றவராகிறீர்கள்.  

உதாரணமாக ... உங்களது அங்கத்தின் கைவிரல்,  உங்களது பேச்சைக் கேட்க்காமல் எரியும் விளக்கில் கைவிரலை வைத்தால் அது விரலுக்கு ஏற்படும் கேடு அல்ல,  விரல் பேச்சைக்கேட்காமல் போனதற்குத் உங்களது தலை தான் காரணம், அதாவது தலைமை வகிக்கும் மூளைதான் காரணம். அந்த மூளைக்கு அனுபவமோ அறிவோ இல்லை என்பதாகப் பொருள். 

ஆகவே உங்களது ஆணைக்கு அடிபணியாதவரை வேலையிலிருந்து நீக்குவது என்பது,  உங்களது விரலை / கையை நீங்களே வெட்டிக்கொள்வதற்குச் சமம். 

அப்படியென்றால் ஆணைக்கு அடிபணியாதவரை எப்படித்தான் திருத்தி வழிக்கு கொண்டுவருவது என்றால் அதற்குப் பலவழிகள் உள்ளது....

வருகை தாருங்கள்.. எளிமையான, அருமையான, அனுபவப்பூர்வமான வழியில், திறமையாக செயல்படுவது எப்படி என்பதை எனது வலைப்பூவிற்குள் வலம்வந்து, எனது பதிவுகளை படித்துப் பயன்பெறுங்கள்.  
உங்களது அன்பான வருகைக்கு "http://gopalkrishnaniyer.blogspot.in" என்கின்ற இணையப்பக்கத்தின் முகவரியை சொடுக்கினால், எனது வலைதளத்தின் வரவேற்பறைக்கதவு திறக்கும்.   
....அப்போது நான் ஆந்திர மாநிலத்தின் ரேணிகுண்டா-திருப்பதி விமான தளம் அமைக்கும் திட்டப்பணியில் இருந்த நேரம்... என்னுடைய திட்டப் பணிக்குழுவில் ஒரு இளம் பொறியியல் பட்டதாரி மிகவும் மிடுக்கான தோற்றத்துடன்,  கலெக்டெர் ஒருவரது சிறப்பு சிபாரிசின் பெயரில் புதிதாக வேளையில் சேர்ந்தார்.

வேளையில் சேர்ந்த அன்றே அவர் தனக்கு இப்படிப்பட்ட வேலைகள் மட்டுமே செய்யப்பிடிக்கும் என்று பட்டியலிட்டு தந்தபோதுதான்... புரிந்தது  "இவரைப் பற்றி நன்கு தெரிந்துதான் எனது தலைமையின் திட்டப்பனிக் குழுவில் சேர்த்திருக்கிறார்கள் என்று" 

முதல் இரண்டு நாட்கள் .. திட்டப்பணிமனையை சுற்றிப்பார்த்து உங்களுக்கு என்ன புரிந்தது, அல்லது புரியவில்லை என்பதைக் கூறுங்கள் என்று கூறி அனுப்பிவிட்டேன். சுற்றுவட்டார மொழியான தெலுங்கு மொழியிலேயே பேசினார், அதிலும் அவருக்கான பிடிவாதம் தெரிந்தது..... (நான் பல இடங்களுக்கு  சென்று பணியாற்றியதால் எனக்கு 7 மொழிகள் பேசுவது என்பது கட்டாயமாக எனது மண்டையில் புகுத்தப்பட்டிருந்தது..... இருந்தும் சங்கீத ராகங்களில் எனக்கிருந்த ஈடுபாட்டால் தியாகராய கீர்த்தனைகளை அர்த்தம் புரிந்து ரசித்திட மூன்றேமாதங்களில்  நான் மிகவும் விரும்பி கற்றுக்கொண்ட தெலுங்குமொழி, பெங்களூரு போன்ற பெரு நகரங்களில் பெயர்ப்பலகையை படிக்கவும் மேலும் பல இடங்களில் தெலுங்கு மொழி எனக்கு மிகவும் உதவியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.)      

மூன்றாம்நாள் என்னிடம் வந்த அவர்,  எந்த அளவுகளையும் குறிப்பெடுத்துக்கொள்ளாமல்,  வெறும் வாய் வார்த்தையால் அளந்துக்கொண்டிருந்தார்.  ஒரு சிறு வேலையைத் தந்து அதை செய்யுமாறு  கூறி அனுப்பிவைத்தேன் ... அது தனக்கு பிடிக்கவில்லை "அதை செய்யமுடியாது" என்று கூறி போன வேகத்தில் திரும்பிவந்துவிட்டார்.  திட்டக் குழுவினர்களோடு இணையாமல் தனித்தே இருந்ததால் எந்த வேலையையும் அவரால் செய்யமுடியவில்லை.... அதோடு எதற்க்காக செய்யவேண்டும் என்கிற இறுமாப்போடு இருந்தார். 

திட்டப்பணியிடத்தில் பொருட்களைவைக்கும் ஒரு "குடோன்" பட்டறை ஒன்று இருந்தது அதில் எனது கட்டளைக்கு அடிபணியாத அந்த இளம் பொறியாளருக்கு ஒரு மேஜை நாற்காலி போட்டு அங்கு அவருக்கு எந்த வேளையும் தராமல் வெட்டியாக  உட்காரவைத்துவிட்டேன். 

ஒரு 10 நாட்களாக கூட அவரால் வெட்டியாக உட்கார்ந்து பொழுதை போக்கமுடியவில்லை. அதற்க்கு அடுத்தநாள் என்னிடம் வந்த அவர்... மன்னிப்பு கேட்டதோடு, எந்த வேலையாக இருந்தாலும் செய்யத்தயார்...!!! என்று வழிக்கு வந்தார்... அன்று அந்த பொறியியல் பட்டதாரி செய்யத் தொடங்கிய முதல் வேலை "எடுபுடி-சிமெண்ட் கலவையை தூக்கும் சித்தாளு வேலை"...

அதை அவர் கஷ்டப்பட்டு செய்யவில்லை, இஷ்டப்பட்டுதான் செய்தார்.. என்பது பிறகு ஒரு நேரத்தில் அதேநபர் புதுதில்லி T3 விமானநிலைய திட்டப்பணியில்.... நான் விப்ரோவின் சார்பில் பணியிலிருந்தபோது, அவர்  ஜி எம் ஆர்(GMR) நிறுவனத்தில் அதிகாரியாக என்னை சந்தித்தபோது... மெழுகாக மனம் உருகிவிட்டார்..... இன்றளவும் எனது தொடர்பிலிருக்கிறார்...   

ஆக...திருவள்ளுவரின் கூற்றான  "அவர் நான நன்னயம் செய்துவிடில்.."  நன்றாக வேலைசெய்தது. 

என் கட்டளைக்கு அடிபணியாதவர்களிடம் " ஒழுங்காக நான் சொல்வதைக்கேட்டு வேலை செய், இல்லையென்றால் வேலையை விட்டு போய்விடு" என்று கோபமாக சண்டை போட்டிருக்க முடியும். சிலர் நம்மை கோபமூட்டி கொதிப்படையச்செய்ய முயற்சிப்பார்கள், அப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையை சரியாக எதிர்கொள்ளாதவர்கள் தோல்வியடைகிறார்கள். அவர்களது கோபமான சண்டையால் பெயரையும் மதிப்பையும் இழக்கநேரிடுகிறது.  உதாரணமாக கோபமான ஒரு நாய் நமது எதிரே வந்து குறைக்கிறது என்றால், நாமும் அதற்க்கு எதிராக நாயைப்போல் குறைக்கும்போது, நாய்க்கும் மனிதனுக்கும் வித்தியாசம் இல்லாமல் இருவரும் ஒன்று என்ற நிலைக்கு தள்ளப்படுவோம்.   ஆகவே எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் அமைதியாக எதையும் எதிர்கொள்ளும் பக்குவம் என்பது, சிறந்த அனுபவமாக கருதப்படுகிறது.  

இது ஒரு சிறு உதாரணம்தான், இதைப்போல் பல் நேரங்களில் பல அனுபவங்கள் எனக்கு பாடம் கற்றுத் தந்திருக்கிறது... பலநேரங்களில் முரடர்கள் கூட பொட்டிப்பாம்பாக என் கட்டளைக்கு  அடங்கி அடிபணிந்து வேலைசெய்திருக்கிறார்கள். ... அவை அனைத்துமே "ஆடற மாட்டை ஆடி கறக்கணும், பாடற மாட்டை பாடிதான் கறக்கணும்" என்கிற நமது முன்னோர்களின் கூற்றைத்தான் நாம் சரியான வகையில் பயன்படுத்திக்கொள்வதில், நமது திறமையை நாம் உணரமுடியும். 

மேலும் இப்படிப்பட்ட பல அனுபவங்களை கீழ் காணும் புத்தகத்தில் எழுதியிருக்கிறேன் வாங்கி படித்துப்பாருங்கள்.  இதை நான் புத்தக வியாபாரத்திற்காக சொல்லவில்லை. எனது அனுபவங்கள் சிறந்த வழிவகைகளை கற்றுத்தரும் என்று நான் நம்புகிறேன். 
எனது அனுபவங்கள் உங்களுக்கு பயனுள்ளவகையில் அமைந்து, அந்தப்புத்தகம் சிறந்த பெயரையும் புகழையும் பெறுமேயானால் .... எனது முதுமைக்காலங்களில் எனது பெயரே எனக்கு தேவையான நிதியை சம்பாதித்து தரும். அதாவது உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு எனது அனுபவக் கல்வி பயன்படும் என்கிற நோக்கில், அந்தக் கல்வி நிறுவனங்கள் என்னை அழைக்கும்போதெல்லாம் என் பெயர்தான் எனக்கு தேவையான நிதியை சம்பாதித்து தரும் என்பது உங்களுக்கு புரிகிறதா?... 
வானொலி நிகழ்ச்சிக்காக நான் எழுதி வழங்கியதை புத்தகமாக "கோகிலாவின் 108 நேர்காணல் அனுபவங்கள்" 

அன்பு நேயர்களே நண்பர்களே, இன்றய நேர்காணல் விளையாட்டை விளையாடலாமா? வாருங்கள் நிகழ்ச்சிக்கு செல்வோம்... 

பாடல்:- போடச்சொன்னா ...... போட்டுக்கறேன் ...... போதும்வரை ......... கன்னத்திலே..பாடலின் திரைப்படம்:- பூவா தலையா (1969) பாடலை இயற்றியவர் கண்ணதாசன், பாடலை பாடியவர் TMS, இசை MSV.

வாய்ப்பிற்கு நன்றி 
மீண்டும் சந்திப்போம்
இப்படிக்கு  கோகி-ரேடியோ மார்கோனி. 

Saturday, March 30, 2019

ஒருநாள் என்பது நமக்கு 30மணி நேரம் ஆனால் மற்றவர்களுக்கு வெறும் 24 மணி நேரம் மட்டுமே. அது எப்படி???

ஹலோ சுட்டீஸ் இனிய மாலை வணக்கம்,

*பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-19*
*(ஒள) பணத்தின், நேரத்தின், ஆற்றலின் மதிப்பை தெரிந்துகொள்ளும் பயிற்சி விளையாட்டு-4*  

ஒருநாள் என்பது நமக்கு 30மணி நேரம் ஆனால் மற்றவர்களுக்கு வெறும் 24 மணி நேரம் மட்டுமே. அது எப்படி என்று அந்த விளையாட்டை விளையாடி தெரிந்துகொள்வோமா?. 

வேகமாக இயங்கும் இயந்திர உலகில் ஒருநாள் என்பது ஆரம்பித்ததுமே முடிந்துவிடுவது போல உள்ளது. இன்றைக்கு என்ன செய்ய போகிறோம் என்பதை திட்டமிட்டு செய்ய வேண்டும் என்பார்கள். இன்று திட்டமிடவே பாதி நாட்கள் போய் விடுகிறது என்று கூறுபவர்களும் உள்ளனர்.
ஆனால், அதே நேரத்தில் ஒரு நாளை சிறப்பாக கையாளும் ஆளுமை திறன் கொண்டவர்களும் உள்ளனர். ஒரு நாளில் எந்த வேலையை எப்போது செய்ய வேண்டும்? எதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை அறிந்து செயல்படுபவர்களும் உள்ளனர். அவர்களது ஒருநாள் எப்படி உள்ளது என்று பார்ப்போம்.

புல்லட் ட்ரெயினாய் பறக்கும் நேரத்தை யாராலும் நிறுத்தி வைக்கமுடியாது. ஆனால் அந்த நேரத்தை குறித்து அலர்ட்டாக இருந்தால் டன் கணக்கில் சாதிக்கலாமே! நம் மூளை, காலத்தை எப்படி புரிந்துகொள்கிறது,  நேரத்தை எப்படி உணர்ச்சிகள் உறிஞ்சுகின்றன, நேரத்தினை குறைத்து மகிழ்ச்சியான வாழ்வை அதிகப்படுத்துவது எப்படி என சொல்லித்தரும் ரைமிங் அண்ட் சூப்பர் டைமிங் விளையாட்டுத்தான் இந்த பயிற்சி விளையாட்டு.

நேரத்தை ரசித்து ருசித்து அனுபவிக்கும்போது அதன் அருமை புரியும்:-

பாடல் :- நிலாக் காய்கிறது, நிறம் தேய்கிறது, யாரும் ரசிக்கவில்லையே ....இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்....
  
பாடல் {....இன்னும் கொஞ்சநேரம் இருந்தாதான் என்ன? ஏன் அவசரம் என்ன அவசரம்.. நில்லு கண்ணே...}

பயிற்சி விளையாட்டு:- கேட்கப்படும் கேள்விக்கு ஒரு நிமிட நேரத்திற்குள் பதிலளிக்கவேண்டும். தவறான பதிலுக்கு உங்களுக்கு தரப்பட்ட நேரத்திலிருந்து இரண்டு (2) நிமிடம் கழிக்கப்படும். சரியான விடையையும் அதை ஒரு நிமிடத்திற்கு முன்னதாக கூறினால் மேலும் ஒரு நிமிடம் உங்களது கணக்கில் சேர்க்கப்படும். பதில் தெரியாவிட்டால் பாஸ் என்று கூறியோ அல்லது அமைதியாக இருந்து அந்த ஒரு நிமிடத்தை செலவு செய்து தப்பித்துக்கொள்ளலாம்.  இப்போது பயிற்சி விளையாட்டை விளையாடலாம் வாங்க.

இந்த விளையாட்டில் நீங்கள் கவனமாக இருக்கவேண்டியது தவறான பதிலை கூறி அதிக நேரத்தை இழக்கக்கூடாது. விடை தெரியவில்லை என்றால் அமைதி காத்து ஒரு நிமிட நேரத்தை செலவு செய்து தப்பித்துக்கொள்ளலாம். விடை தெரிந்தால் உடனே ஒரு நிமிடத்திற்குள் கூறி மேலும் ஒரு நிமிட நேரத்தை சேமிக்கலாம். ஆகவே இந்த விவரங்களை நன்கு நினைவில் வைத்திருந்தாலே நேரத்தை சேமித்து வெற்றிபெறலாம். சரிதானே சுட்டீஸ் நீங்களும் இந்த விளையாட்டும் விளையாடிப்பாருங்கள். நீங்கள் எத்தனை மணித்துளிகளை சேமித்தீர்கள் என்று கணக்கிட்டு வெற்றிபெறுங்கள். 

உங்களின் வாழ்க்கையின் வெற்றி வாய்ப்பிற்கு கீழ்கண்டவைகளை உங்களின் கவனத்தில் வையுங்கள் எதிர்காலத்திற்கு உங்களுக்கு பயன்படும்.  ஒரு தொழிற்ச்சாலையின், ஒரு நாளின் 24மணி நேர உற்பத்தியை, அதே 24மணி நேரத்தில் (ஒருநாளின்) 30மணிநேர உற்பத்தியாக்கி(அதாவது ஒவொரு 8 மணி நேரத்தில், 10 மணி நேர உற்பத்தி = 2 மணி நேர கூடுதல் உற்பத்தி 3shift x 8+2 =30Hrs)-லாபத்தை செயலில் செய்து காட்டிவிட்டால் எப்படிப்பட்ட நிறுவனமாக இருந்தாலும் அசந்து போவார்கள்" அப்படி அந்த தொழிற்ச்சாலையில் பணிபுரியும் பலரது  ஒருநாளாய 6 மணி நேரத்திற்கான சம்பளத்தை ஒரு பெரிய தொழிற்சாலைக்கு மிச்சமாககுகிறீர்கள் என்றால் ஒரு மாதத்தில் அந்த தொகையானது ஒரு பெரிய தொகையாகவே இருக்கும்.  "நேரத்தை, ஆற்றலை, பணத்தை  மிச்சப்படுத்துவதுடன்,  இரட்டிப்பாக்குவது எப்படி என்று சிந்தியுங்கள் பல உண்மைகள் உங்களுக்கும் புரியும்"

உதாரணமாக அறிவியல் முறை வேலை நேரம் என்பார்கள். ஒருவர் ஒரு நாளின் வேலை நேரமான 8 மணி நேரத்தில், 100 வாகன டயர்களை பொருந்துகிறார் என்றால், அவருக்கு அந்த வேலை பழக பழக அவர் மேலும் அதிவேகமாக அவரின் வேலையை செய்வார் ஆகவே அவர் 100 வாகன டயர்களை பொருத்தும் வேலையை 6மணி நேரத்திலேயே முடித்துவிடுவார் அல்லது அவரது 8 மணி நேர வேளையில் 125 வாகன டயர்களை பொருத்தியிருப்பார். அதாவது 25 டயர்கள் பொருத்தும் வேலையை அதிகமாக செய்திருப்பார். 

ஆகவே 8 மணி நேர வேலையை நேரத்தை சேமித்து 6 மணி நேரத்திலேயே முடித்துவிடுவார். அல்லது மேலும் 2 மணி நேர அதிக அளவிலான உற்பத்தியை செய்திருப்பார்.  

சுட்டீஸ் இது உங்கள் வீட்டில் வேலைக்கு போகும் உங்களது பெற்றோர்களான அப்பா அம்மா அவர்களுக்கு இந்த உதாரணத்தை எடுத்து சொல்லுங்கள் எப்போதும் அலுவலகம் வேலை என்று உங்களை கவனிக்காமல் உங்களோடு வீட்டில் சந்தோசமாக நேரத்தை செலவு செய்ய தெரியாத உங்களது பெற்றோர்களுக்கு நீங்கள்தான் விவரமாக எடுத்து கூறவேண்டும்... "என் பாசத்திற்குரிய அப்பா அல்லது அம்மா, முதலில் நீங்கள் உங்களது அலுவலகத்தில் உங்களது வேலை எது என்று நன்கு தெரிந்துகொண்டபின், அந்தப் பணியை சிறப்பாக செய்வதோடு நேரத்தை மிச்சம் பிடித்து அந்த நேரத்தில் உங்களது சுய முன்னேற்றத்திற்கான பணியையும் உங்களது குடும்பம், பிள்ளைகள்  சார்ந்த பணிகளை செய்தால் தான் எனது பெற்றோர்களான நீங்கள் சிறப்பான இடத்தை அடையமுடியும். அதற்க்கு உங்களது அலுவலகப்பணியை குறித்த நேரத்திற்கு  முன்பாகவே முடியுமாறு செய்து முடித்து, அதில் கிடைக்கும் உபரி நேரத்தில் எங்களுக்கும் உங்களோடு விளையாட நேரம் ஒதுக்கவேண்டும் என்று கூறுங்கள்.

உதாரணமாக ஒருவரின் அலுவலக வேலை 8-மணி நேரம் என்றால், நீங்கள் 8-மணி நேரத்தில் செய்யவேண்டிய வேலையை 6-மணி நேரத்திலேயே செய்து முடித்துவிட்டு 2-மணி நேரத்தை மிச்சப்படுத்தி உங்களின் சொந்த குடும்பத்திற்காகவும் அதோடு உங்களை நீங்கள் உயர்த்திக்கொள்ளும் செயல்களை செய்து சிறப்பான நிலையை அடைய பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.ஆகவே ஒரு நாளைக்கு 24மணி நேரம்  என்றால், ஒவோவ்று 8-மணி நேரத்தில் நீங்கள் சேமிக்கும் 2மணி நேரம் உங்களுடைய மகிழ்ச்சியான நேரமாக"அப்பாவின் நேரமாக", உங்களின் குடும்ப உயர்வுக்காக மட்டும் செலவு செய்யக்கூடியதாக, ஒருநாளைக்கு  6மணி நேரம் உங்களுக்கு கிடைக்கிறது. அதாவது ஒரு நாள் என்பது உங்களுக்கு (நாள் 24 மணி + உங்களுடைய சேமிப்பு  6 மணி  = 30மணி நேரம்). மற்றவர்களுக்கு வெறும் 24மணி நேரம். "அதாவது உங்களுக்கு பணம்பழம போன்ற நெல்லிக்கனி" புரிகிறதா? என்ன சுட்டீஸ், நீங்கள்தான் இந்த உதாரணங்களைக் கூறி உங்களின் பெற்றோர்களிடம் கேட்கவேண்டும். 


@"எனக்குமட்டும் யோசிக்க இன்னும் சிறிது நேரம் தாருங்கள், மேலும் சிறப்பாக செய்யமுடியும் என்றேன்" 

"அதை சரியாக புறிந்துகொள்ளாத நிறுவனத்தின் உரிமையாளர் "வேலையை விட்டுவிட்டு உன் வீட்டிற்கு சென்று உட்கார்ந்து யோசி என்றார்" 

எனக்கு வந்த கோபத்தை செயலில் காட்டினேன்... 

அடுத்த சில நாட்களிலேயே அவருக்கு புரியும் படி ஒரு நாளின் 24மணி நேர உற்பத்தியை, அதே 24மணி நேரத்தில் (ஒருநாளின்) 30மணிநேர உற்பத்தியாக்கி(அதாவது ஒவொரு 8 மணி நேரத்தில், 10 மணி நேர உற்பத்தி = 2 மணி நேர கூடுதல் உற்பத்தி (3shift x 8+2 =30Hrs)-லாபத்தை செயலில் செய்து காட்டியபோது அசந்த்துபோனார்கள்" 

நான் அவர்களிடம் சொன்னது..... "நிறுவனம் எனக்கு சம்பளம் தரவில்லை நான்தான் நிறுவனத்திற்கு தருகிறேன் என்றேன் (Contribute to Company) ", அதோடு நான்மட்டுமில்லாமல் என்னுடைய குழுவினரும் கூட அப்படித்தான் என்றேன்....... 

"நேரத்தை மிச்சப்படுத்துவதுடன்,  இரட்டிப்பாக்குவது எப்படி என்று சிந்தியுங்கள் பல உண்மைகள் உங்களுக்கும் புரியும்" கோகி....  

Received an Award -"Double the volume of Business-2002”  

ஆக்ரோஷமான இரட்டிப்பு வியாபார  யுக்தி விருது-2002 (கோகி.....) 

நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி.

*முன்னோட்டம்*
நாளை மறுநாள் நாம் விளையாடவிருக்கும் பயிற்சி விளையாட்டு:-
*பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-20*
*(ஒ) சோம்பல் தவிர்த்து புத்துணர்ச்சி பெரும் பயிற்சி விளையாட்டு-2* 

@அந்த ஒரு பொருள் "சொர்க்கத்தில்" மட்டுமே கிடைக்கும் என்றால், அந்தப் பொருளை கொண்டுவருவதர்க்காக சொர்க்கத்துக்கு போயிட்டு வரலாம் வாரீங்களா!!!!.....

@அந்த ஒரு பொருள் "சொர்க்கத்தில்" மட்டுமே கிடைக்கும் என்றால், அந்தப் பொருளை கொண்டுவருவதர்க்காக சொர்க்கத்துக்கு போயிட்டு வரலாம் வாரீங்களா!!!!..... 
சென்றவாரம் நமது  பயிற்சியாளர்களின் பயிற்சிப்பட்டறை வாட்சப் குழுவில் நான் கேட்டிருந்த கேள்விக்கான பதில் இது.

Episode-110. இன்றைய நேர்காணல் விளையாட்டை விளையாடலாமா? 

It wan an interview question… “A Things/materials is most important for our Project work. But that materials is available only in “Heaven”… How to get it that materials from Heaven? and how to complete the project work? First you explain us what is your answer for this question, and how you will be getting such things from Heaven?    

ஒரு நிருவனத்தின் வேலைவாய்ப்பு நேர்காணலின்போது கேட்கப்பட்ட கேள்வி அது? 

நமது திட்டப்பணிக்கு உடனடியாக தேவைப்படும் அந்த ஒரு பொருள் "சொர்க்கத்தில்" மட்டுமே கிடைக்கும் என்றால், அந்தப் பொருளை கொண்டுவருவதர்க்கான சாதனையை நீங்கள் செய்யவேண்டிய சூழலில், உங்களின் பதில் என்ன? என்ன செய்வீர்கள்?. எப்படி கொண்டுவருவீர்கள்? முதலில் இந்த கேள்விக்கான பதிலைக்கூருங்கள் என்றனர்? 

அது ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூருக்கு  அருகேயுள்ள  தார்ப்பாலைவனத்தில் (  இந்தியாவில் இருக்கும்  தார்ப்பாலைவனத்தின் மொத்தப் பரப்பளவு சுமார் 200,000 km2 ஆகும்) அமையவிருக்கும் ஒரு பெரிய காற்றாலை மின் உற்பத்தி மற்றும்  சூரிய ஆற்றலை மின்சக்தியாக மாற்றி பெறக்கூடிய நிறுவனத்தின் திட்டப்பணியை மேற்கொள்ள திட்ட மேலாளருக்கான்(Project Manager) நேர்காணல் தேர்வின்போதுதான் இந்தக் கேள்வி கேட்கப்பட்டது .  காரணம் திட்டப்பணி நடக்கவிருக்கும்  அந்த தார்ப்பாளைவனத்தில் சரியான சாலை வசதிகூட கிடையாது அப்படிப்பட்ட சவாலான பணியை ஏற்று செய்யக்கூடிய திட்ட மேலாளருக்கு எத்தகைய சூழலையும்  எதிர்கொண்டு சமாளிக்கும் திறமை இருக்கவேண்டும் என்று எதிர்பார்த்தனர்.  

சாதிக்க குறிப்பிட்ட எல்லை என்று ஏதுமில்லை. உங்களின் சாதனையை பிறர் பயன்படுத்திக்கொண்டால் அதற்காக நீங்கள், வருத்தப்படவேண்டிய அவசியமில்லை. அவர்களுக்கு உங்களின் சாதனையை பயன்படுத்திக்கொள்ளமுடியுமே  தவிர, அவர்களால் சாதிக்கமுடியாது. ஆகவே சாதிக்க, சாமர்த்தியமும் மிக மிக முக்கியம். அதோடு அந்த அந்த நேர, கால, இடத்திற்கு ஏற்றார்போல, சமயோசிதமாகவும் சாமர்த்தியமாகவும் பதில் சொல்ல தெரிந்திருக்கவேண்டும்.  

உங்களின் பதில் "ஆம்/ முடியும்" என்று கூறுவீர்களானால், முதலில் ஒரு சில விவரங்களை நன்கு ஞாபகத்தில் வைத்திருக்கவேண்டும். அதாவது 

சொர்க்கம் அது எங்கிருக்கிறது? 

எப்படி அங்கு செல்லமுடியும்? 

புராணங்களில் மனிதனின் இறப்பிற்கு பின்பு சொர்க்கம் செல்லலாம் என்று குறிப்பிட்டிருப்பதை கவனத்தில் கொண்டு பார்க்கும்போது. இறந்தபிறகு திரும்ப மனித உடலில் அதுவும் நமது அதே உடலுக்குள் திரும்ப முடியுமா? என்கிற பல கேள்விகளுக்கு விடையே இல்லை. அப்படிப்பட்ட சூழலில் உங்களின் பதில் சிறப்பானதாகவும், அந்த நேர, கால, இடத்திற்கு ஏற்றார்போல, சமயோசிதமாகவும், சாமர்த்தியமாகவும் பதில் சொல்ல தெரிந்திருக்கவேண்டியது அவசியம். 

சரி இப்போது இந்தக் கேள்விக்கான சாமர்த்தியமான பதில் என்ன என்று பார்ப்போம்?   

"நானே சென்று எடுத்துவருவதைவிட, யாரையாவது சொர்கத்திற்கு அனுப்பி எடுத்துவரச் செய்வேன் " என்று  சாமர்த்தியமாக பதில்கூறவேண்டும்.

மேலும் யாரும் பார்த்திராத அந்த பொருளை எடுத்துவருவது மிகவும் எளிது... நீங்கள் எந்த ஒரு புதுப் பொருளை எடுத்துவருகிரீர்களோ "அதுதான் அது", அதாவது சொர்கத்திலிருந்து பெறப்பட்ட பெருள் இதுதான் என்று எதோ ஒரு புதிய பொருளைக்காட்டி சாதித்துவிட்டாதாக கூறலாம். 

சந்தேகமிருந்தால் உடனே உங்களை சொர்கத்துக்கு அனுப்பி, இதை என்னால் நிருபிக்கமுடியும் என்று கூறினாலே போதும், யாரும் இதற்காக தங்களது உயிரை விட தயாராகமாட்டார்கள், ஆகவே உங்களது சாதனை ஏற்றுக்கொள்ளப்படும். .. இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் .....

ஆகவே, எவர் ஒருவர் எந்த ஒரு கடினமான சாதனைகளையும் தமது குழுவினர்களைக்கொண்டு செய்து முடிக்கும் எண்ணம் உடையவராக, தனது குழுவினர்களை நிர்வகிக்கத்தெரிந்த மற்றும் குழுவினர்களை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள தெரிந்தவர்கள் மட்டுமே சிறந்த திட்ட மேலாளராக பணியாற்றத் தகுதிபெற்றவராவார். ஆகவே குழுவிலிருக்கும் ஒருவரை அனுப்பி "சொர்க்கத்தில்" இருக்கும் அந்த பொருளை நாம் எளிதாக பெற்றுவிடமுடியும் என்று கூறவேண்டும். அதேநேரம் உங்களின் குழுவிலிருந்து எவரையும் இழக்கவோ அல்லது  பணியிலிருந்து வெளியேற்றவோ கூடாது. ஆகவே அனைவரையும் அரவணைத்து செல்லவேண்டிய கட்டாய சூழலில் நீங்கள் இருப்பதையும் நினைவில் வைத்திருக்கவேண்டும். 

அடுத்த நேர்காணல் விளையாட்டை விளையாடலாமா? மீண்டும் நாளை சிந்திப்போம்...

விடாமல் முயலுங்கள்,
விரும்பியதைப் பயிலுங்கள்.
தொடர்ந்து சிந்திப்போம் .....
மீண்டும் சந்திப்போம்!...
வணக்கம்
நன்றிகளுடன் கோகி. என்கிற கோபால கிருஷ்ணன்- ரேடியோ மார்கோனி. 

Thursday, February 21, 2019

The Free Training will earn money for you, இலவச பயிற்சியும் பணம் சம்பாதித்தது தரும்.

TRAIN THE TRAINER:-3

பணம் பண்ணலாம் வாங்க என்று கூறுவதைக்காட்டிலும் பணத்தை சம்பாதிக்கும் எளிய வழிகளை தெரிந்துகொண்டு பயனடைய வாருங்கள் என்று கூறுவதே சிறந்தது... 

நீங்கள் பனி ஓய்வு பெற்றவர்களா? வீட்டிலிருந்தே ஏதாவது செய்து பொருளீட்டவேண்டும் என்று நினைப்பவரா, ஒரு தொழில் அல்லது ஒரு வேலையில் இருந்தும், ஒரு சம்பாத்தியம் மட்டும் போதவில்லை. இரண்டாவது வருமானம் வரும் வகையில் ஏதாவது செய்யவேண்டும் என்று நினைக்கிறீர்களா...?????

அப்படியானால் என்னுடைய அனுபவத்தை கிட்டத்தட்ட 108 வழிகளில் உங்களுக்கு இலவச பயிற்சியாக கீழ் காணும் வலைப்பதிவின் வழியே உங்களுக்கு தர இருக்கிறேன்.... 

உதாரணத்திற்கு நீங்கள் ஒரு பொருட்க்காட்சி அல்லது கண்காட்சிக்கு செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதற்காக நீங்கள் வீட்டிலிருந்து கண்காட்சிக்கூடத்திற்கு சென்று வரும் செலவு அதோடு கண்காட்சி அரங்கிற்குள் சென்று வர ஆகும் செலவு மேலும் கண்காட்சியில் உங்களுக்கு தேவைப்படும் ஒரு பொருளை வாங்குவதற்காகும் செலவு போன்ற பல்வேறு செலவுகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் அல்லவா???????

ஆனால் நான் ஒரு கண்காட்சிக்கு சென்றால் எனக்கு அதற்கான VIP இலவச நுழைவு சீட்டு மற்றும் அந்த கண்காட்சிக்கு வீட்டிலிருந்து சென்று வர வாகன வசதியையும் செய்து தந்து அதோடு அந்த கண் காட்சியை கண்டு திரும்பும்போது எனக்கு ரூபாய் 2,000/- முதல் ரூபாய் 5,000/- வரையிலான மதிப்பு தொகையும். அந்த கண்காட்சியை பயன்படுத்தி மேலும் சில ஆயிரம் அல்லது லட்சங்களை சம்பாதிக்கமுடியும் என்ற அனைத்து அனுபவ  திறமையை உங்களுக்கும் இந்த  https://trainthetrinertraining.blogspot.com/ என்கிற வலைப்பதிவின் வழியே வழங்க இருக்கிறேன். விருப்பமுள்ளவர்கள் இந்த இலவச பயிற்சி வலைப்பதிவில் தங்களையும் இணைத்துக்கொண்டு பயனடையலாம்.

எனக்கு நேரம் கிடைப்பது மிகவும் கடினம் ஆகவே வாரத்திற்கு அல்லது மாதத்திற்கு  1 அல்லது 2 பயிற்சிகள் மட்டுமே இந்த வலைப்பதிவில் வழங்குவேன்....

நீங்கள் வசிக்கும் பகுதியில் எனது அனுபவ பயிற்சியை நேரில் பயிற்சி பெற உங்கள் பகுதியை சேர்ந்த குறைந்தது 15 நபர்கள் ஒன்றாக சேர்ந்து, உங்களது இடத்திற்கு நான் வந்து போகும் செலவுகளை ஏற்க சம்மதம் தெரிவிப்பவர்களுக்கு இந்த இலவச பயிற்சியை நீங்கள் வசிக்கும் பகுதியிலேயே வழங்கமுடியும்...

மேலும் விவரங்களுக்கு, திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9.30 மணிக்கு பிறகு, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9 மணிமுதல் முழுநாளும் எனது கீழ்கண்ட தொலைபேசியில் தொடர்புகொண்டு விவரங்களை பெற்றுக்கொள்ளலாம்....  

அடுத்த பதிவில் கண்காட்சி பார்வையாளராக எப்படி சம்பாதிப்பது என்கிற நேரடி பயிற்சி ஒன்றை வழங்க இருக்கிறேன். புது தில்லியில் நடக்கவிருக்கும் 2 கண்காட்சிகள் பற்றிய அழைப்பிதழோடு அதற்கான நுழைவு சீட்டையும் உங்களின் பார்வைக்கு இங்கு இணைத்திருக்கிறேன்... 

நன்றிகளுடன்,
கோகி என்கிற கோபால கிருஷ்ணன், ரேடியோ மார்க்கோனி, 
புது தில்லியிலிருந்து.....
Consultant/CEO/ED.
IUBA-INDIA (India & Asia Pacific)
+91-9717236514, 7011063999.
www.iuba-india.com
E_mail:-"info@iuba-india.com"
[The Free Training will earn money for you.]
[இலவச பயிற்சியும் பணம் சம்பாதித்தது தரும்]. 


ஒரு சம்பாத்தியம் மட்டும் போதாது. இரண்டாவது வருமானம் வரும் வகையில் ஏதாவது செய்யவேண்டும்...

ஒரு சம்பாத்தியம் மட்டும் போதாது. இரண்டாவது வருமானம் வரும் வகையில் ஏதாவது செய்யவேண்டும். ...

வானொலியில் நான் எழுதி வழங்கிய நிகழ்ச்சித் தொகுப்பை, புத்தகமாக........ பகுதி-100(Episode-100)- இன்றய நேர்காணல் விளையாட்டை விளையாடலாமா? 

....."மேலாளர்" பதவிக்காக நேர்காணல் தேர்வுக்கு வந்திருந்த ஒருவரை அந்த நிறுவன உரிமையாளர் "TOILET-கழிவறை நாற்றமடிக்கிறது சுத்தம் செய்துவிட்டு வா" என்றார்.

இப்போது இந்த விளையாட்டின் பந்து உங்களிடம் உள்ளது. நேர்காணலுக்கு வந்திருப்பவர் நீங்கலாக இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்.

# பொதுவாக அந்த நிறுவனத்தில் பணிபுரியும் மேலாளர் சொல்வதைக்கூட சுத்தகரிப்பு தொழிலாளி சரியாக செய்யமாட்டார். நீங்களோ இன்னமும் அந்த நிறுவனத்தில் சேரவில்லை ஆகவே உங்களுக்கு அந்த நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் உதவமாட்டார்கள்.

# நீங்களாகவே கழிவறையை பெருக்கி சுத்தம் செய்தால் நீங்கள் அந்த பணிக்குத்தான் லாயக்கு என்று முத்திரை குத்தப்படலாம்.

# மேலாளர் பதவிக்கு வந்த என்னைப்பார்த்தா இப்படி சொன்னாய் என்று கோபித்துக்கொண்டு "சரிதான் போடா சொட்டத்தலையா" என்று திட்டிவிட்டு வந்துவிட்டாலும் நீங்கள் மேலாளர் பதவிக்கு லாயக்கு இல்லாதவர் என முத்திரை குத்தப்படும்.

# அப்படியென்றால்  இந்த கேள்விக்கான பதில் என்ன???? ஒரு .நிறுவனத்தின் மேலாளர் என்பவர் விரல் நுனியில் விவரங்களை (fingers edge information) வைத்திருக்க வேண்டமா?

ஒரு நிறுவனத்திற்கு தேவையான அனைத்துவித சேவைகளையும் பெறுவதற்கு தேவைப்படும் சேவை நிறுவன தொலைபேசி எண்கள், நபர், முகவரி, போன்ற அனைத்து தகவல்களையும் நினைவில் வைத்திருப்பவர்களே...  விரல்  நுனியில்  விவரங்கள் வைத்திருப்பவர் என்பவர்"

இப்போது நீங்கள் உங்களின் " விரல் நுனியில் உள்ள விவரங்களை" பயன்படுத்தி கழிவறை சுத்தகரிக்கும் நிறுவனத்தை அழைத்து சுத்தம் செய்யச்சொல்லி, பிறகு சுத்தமான கழிப்பிடத்தை அந்த நிறுவன உரிமையாளரிடம் காண்பித்து "சபாஷ் மிக அருமையாக செய்திருக்கிறாய்" என்று கூறும்போது.... கழிவறை சுத்தகரித்த நிறுவனத்தின் செலவு சீட்டை தந்து அதற்க்கான தொகையை செலுத்துமாறு கூறவேண்டும்.

பாடல்:-...."வேலை இல்லாதவன்தான் வேலை தெரிஞ்சவந்தான் வீரமான வேலைகாரன் வெவகாரமான வேலைக்காரன்.. http://youtu.be/HlYJd-bLiPk "

அடுத்த நேர்காணல் விளையாட்டை நாளை விளையாடலாமா? மீண்டும் நாளை சிந்திப்போம்...

மேலும் இப்படிப்பட்ட பல அனுபவங்களை கீழ் காணும் புத்தகத்தில் எழுதியிருக்கிறேன் வாங்கி படித்துப்பாருங்கள்.  இதை நான் புத்தக வியாபாரத்திற்காக சொல்லவில்லை. எனது அனுபவங்கள் சிறந்த வழிவகைகளை கற்றுத்தரும் என்று நான் நம்புகிறேன். 

எனது அனுபவங்கள் உங்களுக்கு பயனுள்ளவகையில் அமைந்து, அந்தப்புத்தகம் சிறந்த பெயரையும் புகழையும் பெறுமேயானால் .... எனது முதுமைக்காலங்களில் எனது பெயரே எனக்கு தேவையான நிதியை சம்பாதித்து தரும். அதாவது உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு எனது அனுபவக் கல்வி பயன்படும் என்கிற நோக்கில், நான் கிறுக்கித்தள்ளிய எழுத்துக்களை படித்துப் பார்க்கின்ற சில/பல கல்வி நிறுவனங்கள், என்னை அழைக்கும்போதெல்லாம் என் பெயர்தான் எனக்கு தேவையான நிதியை சம்பாதித்து தரும் என்பது உங்களுக்கு புரிகிறதா?... 
வாய்ப்பிற்கு நன்றி ....

முயலும் வெல்லும், ஆமையும் வெல்லும்,

ஆனால் முயலாமை வெல்லாது....

விடாமல் முயலுங்கள்,
விரும்பியதைப் பயிலுங்கள்...
தொடர்ந்து சிந்திப்போம் .....
மீண்டும் சந்திப்போம் !
வணக்கம்... நன்றிகளுடன் கோகி. என்கிற கோபால கிருஷ்ணன்- ரேடியோ மார்கோனி.
Consultant/CEO/ED.
IUBA-INDIA (India & Asia Pacific)
www.iuba-india.com
E_mail:-"info@iuba-india.com"
Contact:- GK India-New Delhi-+91-9717236514, E_mail:-GOPALKRISHNAN64@GMAIL.COM